15வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தேர்வான படங்களுக்கு தமிழர் விருது

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை வழங்கி வருகிறது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா. பதினான்கு வருடங்களாக மிகவும் சிறப்பாக  நடைபெற்றுவரும்  இத் திரைப்பட விழா பிரமாண்ட விழாவாக  உலக நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது.
தற்போது 15வது நோர்வே திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு 2023 ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்க இருக்கிறார்கள். இது குறித்து நோர்வே தமிழ் திரைப்பட விழா இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு” தமிழ்த் திரைப்படங்களுக்கு – தமிழர் விருதுகளை இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு முதல் “கலைச்சிகரம்” விருதினை “புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் விருது” என்ற பெயரில் வழங்க இருக்கின்றோம். இட்டு நிரப்ப முடியாத, பெரும் அன்பும், பரந்த மனிதநேயமும் கொண்ட எங்கள் திரைக்கலைஞரை இந்த விருது மூலம் நினைவுபடுத்தி இதயபூர்வமாக மதிப்பளிப்பதில் பெருமையடைகின்றோம்.

2023 இல் வெளியான திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருந்தது. இது எமது தெரிவுகளுக்கு கடினமாக இருந்தது. எமது பார்வைக்கு கிடைக்கப் பெறாத சில நல்ல திரைப்படங்கள், எங்கள் தெரிவுகளில்  இடம்பெறாமல் போயிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதையும் அறிவோம்.
ஆகவே இனி வரும் காலங்களில், தமிழ் நாட்டில்  உள்ள திரைப்படத்  தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை ஒவ்வொரு ஆண்டும் நிறைவு பெறுவதற்கு முன்பு எமக்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் (2023) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து,  எமது நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 20 திரைப்படங்கள், தமிழர் விருதுகளை பெறும் தமிழ் நாட்டு கலைஞர்களின் விவரங்களை
அறியத்தருகின்றோம்.
14 வருடங்களாக  உங்கள் அனைவருடைய  பேராதரவோடு தான்  இத்  திரைப்பட விழாவை சிறப்புற நடத்த முடிகிறது. ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து வழங்குவீர்கள்  என்று நம்புகின்றோம்.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு  தமிழர் விருதுகள்  எதிர்வரும் 25.02.2024 அன்று அறிவிக்கப்படும்.! என்று கூறியிருக்கிறார்.

நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல்

01. விடுதலை பாகம் 1 – வெற்றிமாறன்
02. அயோத்தி – ஆர்.மந்திர மூர்த்தி
03. போர் தொழில்- விக்னேஷ் ராஜா
04. மாமன்னன் – மாரி செல்வராஜ்
05..குட் நைட் – விநாயக் சந்திரசேகரன்
06. டாடா – கணேஷ் கே.பாபு
07. தண்டட்டி – ராம் செங்கையா
08. யாத்திசை – தரணி ராஜேந்திரன்
09. பொன்னியின் செல்வன் 2 – மணிரத்னம்
10. அநீதி – வசந்த பாலன்
11. நூடுல்ஸ் – மதன்குமார் தட்சணாமூர்த்தி
12. சித்தா – அருண் குமார்
13. இறுகப்பற்று- யுவராஜ் தயாளன்
14. நாடு – எம்.சரவணன்
15. அன்னபூரணி – நிலேஷ் கிருஷ்ணா
16. சிறகு – குட்டி ரேவதி
17. கிடா – ஆர். ஏ.வெங்கட்
18. வி3 – அமுதவானன்
19. பார்க்கிங் – ராம்குமார் பாலகிருஷ்ணன் Parking
20. பம்பர் – எம்.செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top