4 மில்லியன் பார்வையாளர்கள் ; வியத்தகு வரவேற்பைப் பெற்ற ‘வணங்கான்’ டீசர்

‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’, ‘மாநாடு’ உள்ளிட்ட  படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்,  பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கலை படைப்பா, கமர்ஷியல் படைப்பா என பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பாலா.

தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் விதமாக படங்களைத் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் என்பதாலேயே ‘வணங்கான்’ படம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏற்கெனவே ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசரும் அதை உறுதி செய்வது போல ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசர் வெளியான ஒரே நாளிலேயே இதுவரை 4 மில்லியன் ரசிகர்கள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும் அவரது தோற்றமும், ஸ்டண்ட் சில்வாவின் கைவண்ணத்தில் தெறிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகளும், நாடித்துடிப்பை எகிறவைக்கும் ஜிவி பிரகாஷின் இசையும், ‘வணங்கான்’ படத்தின் டீசரை ரிப்பீட் மோடில் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது ‘வணங்கான்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top