நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – விமர்சனம்

காதலன் தன் காதலை நிரூபிப்பதற்காக மதுரையில் இருந்து மாயவரத்திற்கு தன் நண்பனுடன் செல்கிறான் சென்ற இடத்தில் பிரச்சனை உருவாகிறது. பின் அவனுக்கு என்ன ஆகிறது என்பதே மீதி கதை.

திரைப்படம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நடக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரத்தில் வாழ்ந்து வருகிறார் நமது கதையின் நாயகன். வழக்கம்போல் ஊதாரி தனம் செய்துவிட்டு, சுற்றிதிறிகிறான். எந்த ஒரு வேலையும் இல்லை. பெண்களிடம் பேசுவதே மிக முக்கியமான வேலை என செய்து கொண்டு இருக்கிறான். இவனிடம் பேசும் அனைத்து பெண்களையும் எதோ ஒரு வகையில் அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவன் கிடைத்த அனைத்து பெண்களிடமும் பிளே-பாயாக இருக்கும் நாயகனுக்கு ஒரு நாள் காதல் முறிவு ஏற்படுகிறது.ஆனால், நாயகன் அதற்கெல்லாம் சோர்ந்து போகவில்லை. மீண்டும் அவன் ஏற்கனவே பேசிய அனைத்து பெண்களுக்கு சோசியல் மீடியாவில் மெசெஜ் அனுப்புகிறான். அதில் ஒரு பெண் இவனுக்கு பாசிடிவாக மெசெஜ் செய்கிறாள். அவள் மாயவரத்தை சேர்ந்தவள், எனவே அவளை பார்த்து பரிசளித்து அவளை தன் வலையில் விழவைக்க வேண்டும் என செல்கிறான் நாயகன். அங்கு என்ன நடந்தது, மாயவரதுக்கு சென்று அந்த பெண்ணை பார்த்தானா?, பரிசு கொடுத்தானா? என்ன ஆனது கதாநாயகனுக்கு என்பதே மீதி கதை.

நாயகன் செந்தூர் பாண்டியன், ரவிச்சந்திரன் கதாப்பாதிரமாக நடித்துள்ளார். அவர் பேசும் லோகல் மதுரை ஸ்லாங் மிக சரியாக இருக்கிறது. லோகல் மதுரை இளையஜராகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகை ப்ரீத்தி கரண், அரசி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் மதியழகன், காந்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நாயகன் செந்தூர் பாண்டியனும், சுரேஷ் மதியழகனும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகள் கலக்கலாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் உள்ளது. இன்ஸ்டாகிராம் புகழ் தமிழ் செல்வி, சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 7-ல் புகழ் பெற்ற பூர்ணிமா ரவி இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரசாத் ராமர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடிப்பில் வெளி வந்த ’எனக்குள் ஒருவன்’படத்தின் இயக்குனராவார். கார்த்திக் சுப்பராஜ் எடுத்த ’பீட்சா’படத்தின் எழுத்தாளர் ஆவார். படத்தின் முதல் பாதி நல்ல நகைச்சுவையாக நம்மை இழுத்து செல்கிறது. இப்போது இருக்கும் சமுதாயத்து இளைஞர்கள் எளிதில் தங்களை இணைத்துக் கொள்ளும் விதமான நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ப்ரதீப் குமார் இப்படத்திற்க்கு இசையமைத்தும், தயாரித்துள்ளார்.ராதாகிருஷ்னன் தனப்பால் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top