இன்ஸ்பையரிங்கான கதைக்களம் கொண்ட அழகான தீம் ‘பேச்சு’!

தென்னிந்தியாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Ondraga Entertainment, நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல சுயாதீன பாடல்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர்களின் சமீபத்திய வெளியீடுகளான முத்த பிச்சை (இந்தப் பாடலை இசையமைத்து, பாடி, இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்), எரிமலையின் மகளே (கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையில் பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்), Tour De Kollywood & Off Screen with Ondragavஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சமீபத்தில் இணைந்துள்ளது ‘பேச்சு’. ‘ஒரு எளிய உரையாடல் ஒரு உயிரைக் காப்பாற்றும்’ என்ற வலுவான செய்தியை ஆதரிக்கும் அழகான கருப்பொருளைக் கொண்ட கதை இது.
கிட்டத்தட்ட12 நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்தில், தற்கொலைக்கு முயலும் ஒருவன் அழைக்கப்படாத விருந்தாளியின் குறுக்கீட்டால் மனதை மாற்றுகிறான். இந்த கதாபாத்திரங்களைச் சுற்றி கதை நகருகிறது. மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பன்முக ஆளுமையுமான நோபல் பாபு தாமஸ், இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு, இந்த குறும்படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். பாலிவுட் இயக்குநர் அபயின் முன்னாள் உதவி இயக்குனரான அலிஷா பத்லானி இயக்கிய இந்தப் படத்தில் சார்லியுடன் இணைந்து அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு வாசிம் அஷ்ரஃப் இசையமைக்க, விஷ்ணு டி.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார், சங்கீத் பிரதாப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top