ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அனிமல் படக்குழுவினர், டெல்லி தெருக்களில் மக்கள் கூட்டத்தோடு இணைந்து பிரமாண்டமான முறையில் அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழாவினை கொண்டாடினர்.
ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வின் மூலம் டெல்லி தெருக்களை புயலாய் தாக்கி கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது அனிமல் படக்குழு. ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் படக்குழு 11 சகோதரர்களுடன் டெல்லி தெருக்களில் நுழைந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளினர் . இது மட்டுமல்ல, ரன்பீரும் பாபியும் திடீரென மேடையில் நுழைந்து ரசிகர்களுடன் உரையாட, அங்கு கூடியிருந்த பெரும் கூட்டம் கூக்குரலிட்டது. அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழா டெல்லி நகரம் கண்ட மிகப்பெரிய நிகழ்வாகும். 100 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அனிமல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. முழுக் குழுவும் கருப்பு உடையில் இருந்தது, வெளியீட்டு நிகழ்வில் அனிமல் போட்டோ ஆப் அங்கு அமைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாக இருந்தது.
பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து அனிமல் படத்தை தயாரித்துள்ளனர். க்ரைம் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம், டிசம்பர் 1, 2023 அன்று பார்வையாளர்களை நெஞ்சம் அதிரும் பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும்.