ஏ.ஆர்.எம் – விமர்சனம்

திரைப்படம் மூன்று காலக்கட்டங்களில் நடக்கக் கூடியதாக அமைந்து இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் ஒரு ஊரில் விண்கல் விழுகிறது. அந்த விண்கல்லை எடுத்து அந்த ஊரின் ராஜா அதை சிலையாக வடித்து பாதுக்காத்து வருகிறார். அந்த ஊர் ராஜாவின் உயிருக்கு ஆபத்து வரும் பொழுது களரி வீரனான கும்ஜிகேலு {டொவினா தாமஸ்} அவரை காப்பாற்றுகிறார். அவரை காப்பாற்றயதிற்கு பரிசாக டொவினோ தாமஸ் அந்த சிலையை கேட்ட்கிறான் ராஜாவும் கொடுத்து விடுகிறார். இந்த சிலையை தனது சொந்த ஊருக்கு கொண்டு வந்து அங்கு உள்ள கோவிலில் வைத்து அந்த ஊர் மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க பல வருடங்களுக்கு பிறகு மணியன் {டொவினோ தாமஸ்} என்ற திருடன் கோவிலில் இருந்து அந்த சிலையை திருடிவிட்டு செல்கிறான். அது அந்த ஊர் மக்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க அதன் போலி வடிவத்தை அதே கோவிலில் வைக்கச் செல்லும் போது ஊர்மக்களிடம் சிக்கிக் கொள்கிறான்.Tovino Thomas announces release plans for highly-anticipated ARM

இப்பொழுது தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் அஜயன் { டொவினோ தாமஸ்} எலக்டிரிக் பணிகளை செய்து வருகிறார். இவர் கிருத்தி ஷெட்டியை காதலித்து வருகிறார். அந்த கோவிலில் உள்ள சிலையை மீண்டும் திருடுவதற்கு ஹரிஷ் உத்தமன் தலைமையில் ஒரு கும்பல் வருகிறது. மணியன் கதாப்பாத்திரத்தின் பேரன் தான் அஜயன். இதனால் திருட்டு குடும்பம் என்ற பெயர் அஜயன் குடும்பத்திற்கு உண்டு. இதனால் ஹரிஷ் உத்தமன் சிலையை திருடிவிட்டு அந்த பழியை அஜயன் மீது சுமத்திவிடலாம் என பிளான் செய்கிறார். தன் குடும்பத்தின் மீது உள்ள திருட்டு பழியை எப்படி அஜயன் துடைக்க போகிறார்? சிலையின் பின்னணி என்ன? எதற்காக அந்த சிலை மீது காலம் காலமாக பாதுக்காக்கப்பட்டு வருகிறது? சிலைக்கும் டொவினோ தாமஸிற்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

மூன்று கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். மூன்று வேடங்களுக்கு அருமையான வேறுபாடை காட்டி சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக மணியன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகிகளாக நடித்த ஐஷ்வர்யா ராஜேஷ், கிருத்தி ஷெட்டி மற்றும் சுரபி லட்சுமி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கல். ரோகினி ஒரு தாயின் உணர்வை அற்புதமாக கடத்தியுள்ளார்.ARM Movie Review: थ्रिलर फिल्म की गहराई से समीक्षाஇயக்குனர் ஜிதின் லாலின் “ARM”, நாட்டுப்புறக் கதைகள், சமூகக் கருத்துக்கள் மற்றும் 1900, 1950, மற்றும் 1990 ஆகிய மூன்று காலகட்டங்களில் ஒரு பரபரப்பான கதையை ஒன்றிணைத்து புனைவாக கதையை கூறி இருக்கிறார். படத்தின் நேர அலவு பலவீனமாக தோன்றுகிறது. படத்தின் நேர அளவை குறைத்து இருக்கலாம். படத்தின் கிராபிகஸ் மற்றும் விஷ்வல் எஃபக்ட்டுகள் அபாரமாகவுள்ளது.திபு நினன் தாமஸின் இசை படத்திற்கும் கதையோட்டத்திற்கும் பெரிய பலம்.ஜோமோன் டி ஜான்- இன் ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருக்கிறது. மூன்று காலக்கட்டத்தையும் வேறு படுத்தி காட்டியது சிறப்பம்சம்.மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top