பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.
Image400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.

லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள்: பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து , இயக்கம் : லுதீர் பைரெட்டி
தயாரிப்பாளர்: மகேஷ் சந்து
இணை தயாரிப்பாளர்: சாய் ஷஷாங்க்
பேனர்: மூன்ஷைன் பிக்சர்ஸ்
வழங்குபவர்: சிவன் ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவு : சிவேந்திரா
இசை: லியோன் ஜேம்ஸ்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
விளம்பர வடிவமைப்பாளர்: அனந்த் கஞ்சர்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – வால்ஸ் & டிரெண்ட்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top