” புளூஸ்டார் ” படம் ஜனவரி 25 வெளியாகிறது.

நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “புளூஸ்டார்”

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.பாடல்கள் அறிவு மற்றும் உமாதேவி.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார்.
ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , G சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top