தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணையும் #DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கிங் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரின் கூட்டணியில் கலகலப்பான படைப்பான #DNS சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, மேலும் படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக நடந்த படப்பிடிப்பிலும் தனுஷ் கலந்து கொண்டார். அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குரூப்) சார்பில் ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசியுடன் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.
இந்தப் படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பது அண்மைத் தகவல் ஆகும். விவேகமான மற்றும் வலுவான கதைக்கரு கொண்ட திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சேகர் கம்முலாவுடன் இசையமைப்பாளருக்கு இது முதல் படம். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் வலுவான கதையை கொண்ட திரைப்படங்களுக்கு பரபரப்பான ஆல்பங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் #DNS-க்காக ஒரு அதிரடியான பாடல்களை வழங்குவார் என்பது உறுதி.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

நடிகர்கள்:-தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:-
இயக்குனர்: சேகர் கம்முலா
வழங்குபவர்: சோனாலி நரங்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு இயக்குனர்: நிகேத் பொம்மி
தயாரிப்பு வடிவமைப்பு: ராமகிருஷ்ணா சபானி, மோனிகா நிகோத்ரே
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்
விளம்பரங்கள்: வால்ஸ் &   டிரென்ட்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top