‘உறியடி’ என்ற வெற்றி படத்தின் பிறகு நடிகர் விஜயகுமார் நடித்திருக்கும் படம் ,வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அப்பாஸ் எ ரஹமத் இயக்கியுள்ளார். குத்துச்சண்டை வீரராக இருக்கும் பெஞ்சமின் தன்னுடைய ஏரியா இளசுகளையும் சிறந்த வீரர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு எதிராக அவருடைய தம்பி மற்றும் நண்பர்கள் சிறுவர்களை தவறான பாதைக்கு பயன்படுத்துகின்றனர்.

இதுவும் அதை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. போதை நெடி, ரத்தவாடை என படம் முழுக்க லோகேஷின் வழக்கமான சாயல் இருக்கிறது. துடிப்பான இளைஞனின் வாழ்க்கைக்குள் நுழையும் அரசியல் எந்த அளவுக்கு புரட்டி போடுகிறது என்பதை விஜயகுமார் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோன்று முதல் பாதியில் வரும் ஹீரோயின் அதன் பிறகு எங்கும் தென்படவில்லை. இருந்தாலும் காதல் காட்சிகள் கவனம் பெறுகின்றது. இப்படி படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதியில் சிறு தொய்வை காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் யூகிக்கும்படியான காட்சிகள் தான்.
கிளைமாக்ஸ் காட்சியும் முன்பே கணிக்க முடிவதால் சுவாரஸ்யம் குறைகிறது. ஆனால் அதை எல்லாம் படத்தின் மேக்கிங், பின்னணி இசை மறக்கடிக்க செய்திருக்கிறது. அதிலும் கேமரா ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகளை அட்டகாசமாக காட்டி இருக்கிறது. ரொம்ப ரத்தம் தெறிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.