ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK, !!

69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக  ஆட்சி செய்தார் கிங்கான் SRK. பதான் மற்றும் ஜவான் மூலம், SRK திரையுலகில் 2600 கோடிகள் அளவில் பாலிவுட்டின் வருவாயில் பங்களிப்பு செய்துள்ளார்! இந்த ஆண்டு முழுவதும் வெற்றி அலைகளை உருவாக்கி வரும் நிலையில், அவரது பிளாக்பஸ்டர்களான பதான் மற்றும் ஜவான்  திரைப்படங்கள் இப்போது, 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
jawan rajkumar hirani dunki pathaan shah rukh khan to rule box office in 2023 with top 3 highest grossing films slt | Pathaan-Jawan-Dunki:साल 2023 में सबसे ज्यादा कमाई करने वाली फिल्मों केஜவான் மற்றும் டங்கி படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். SRK டங்கி படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) பிரிவிலும் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பதான் திரைப்படம் சிறந்த இயக்குநர் பிரிவிலும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில், ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ மற்றும் பதான் படத்திற்காக சித்தார்த் ஆனந்த் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தற்போது  SRK எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வெல்வார், குறிப்பாக எந்தப் படத்திற்காக  வெல்வார் என்பது தான்  இப்போதைய பேசுபொருள். இந்த விருது வழங்கும் விழாவில் ஷாருக்கானுக்கு போட்டி அவரே தான் என்பது குறிப்பிடதக்கது.

SRK இந்த ஆண்டில் 8 கோடி வரையிலான பார்வையாளர்களை தன் படங்கள் மூலம் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளார்.  ஜவான் 3.93 கோடி, பதான் 3.20 கோடி பங்களிப்புடன், ஆண்டு முழுவதும் அதிரடி காட்ட  டன்கி 1 கோடிக்கு மேல் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதுவரை இம்மாதிரியான சாதனை செய்த  முதல் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் மட்டுமே. பதான், ஜவான், டங்கி ஆகிய மூன்று படங்களை ஒரே வருடத்தில் தந்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் ஷாருக்கான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top