ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற கண்பத் டிரைலர்

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கும் “கண்பத்’ படத்தின் டிரைலர் வெளியாகி, இந்திய சினிமாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘கண்பத்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையான பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
டைகர் ஷ்ராஃப் மற்றும் க்ரிதி சனோன், புகழ்பெற்ற திரை நட்சத்திரமான அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த பிரம்மாண்டமான படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, இதன் டிரைலர் அனைவருக்கும் விருந்தளிக்கும் வகையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இப்படத்தில் ஒழுங்காக இணைக்கப்பட்ட VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இது படத்திற்கு சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க உதவுகிறது. ஜாக்கி பாக்னானி, உலகத் தரம் வாய்ந்த சினிமாக் காட்சியைக் கொண்டு வருவதையும், இதுவரை பார்த்திராத VFX, பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ வழங்கும் ‘கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்’ படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி இருக்கிறார். இப்படத்தை வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top