டிராவல்ஸ் டிரைவரான அங்கையற் கண்ணனும், சரவண சக்தியும் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். நாளை முதல் திருந்தி விடுவேன் என்று கூறி விட்டு மறுநாள் மது பாட்டிலை எடுக்கும் இவர்கள் குடும்ப வாழ்க்கையில் மதுவினால் ஏற்படும் பிரச்சினைகள்தான் மீதி கதை.ராமநாதபுரத்தை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் ஆரம்பத்தில் ராமநாதபுரத்தின் பெருமைகளை விளக்குவது சிறப்பு.
குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதையை காட்சியாக மட்டுமல்லாமல் விழிப்புணர்வாக படத்தை இயக்கி உள்ளார் குட்டிப்புலி சரவண சக்தி.
படத்தின் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் நடித்துள்ள அங்கயர் கண்ணன் முழுநேர குடிகாரர்களின் பிரதிபலிப்பாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
அங்கயற்கண்ணனோடு சேர்ந்து குடிப்பதும் குடித்து விட்டு பெட்ரூமில் சிறுநீர் கழிப்பதும் என சமூகத்தில் மடா குடிகாரன் என அழைக்கப்படும் குடிகாரனாக அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கின்றனர்.கணவன் எப்போதும் குடியும் கும்மாளமுமாக இருந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் பாசத்தை பொழிவதும் அப்பாவி மனைவியாக என மாமா மாமா என பிரானா நடிப்பு ரசிக்க வைக்கிறது.அபி நக்ஷத்திரா, சாம்ஸ், மயில்சாமி ஆகியோரின் நடிப்பு கதைக்கு பலம். ஆரம்பம் முதல் இறுதி வரை மது அருந்தும் காட்சிகள் அதிகமாக இருப்பது பலகீனம்.சமூகத்தில் குடியால் சீரழியும் குடும்பங்களின் நிலையை படமாக மட்டுமல்லாமல் விழிப்புணர்வு பாடமாக வந்துள்ளது கிளாஸ் மேட்ஸ்.