தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ‘கோல்டன் ஃபேஸ் ஆஃப் சவுத் இந்தியா’ போட்டியின் தொடக்க நிகழ்வு ஜனவரி 20, 2024 அன்று கிண்டி, ஹில்டனில் நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டி புறஅழகு என்ற வழக்கத்தைத் தாண்டி புதிய பரிணாமம் எடுத்துள்ளது. ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களை ஆதரிப்பது மற்றும் அவர்களுக்கான களத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
கெளரவ சேர்மன் டிரைக்டர் விஜய் மற்றும் விண்டோ என்டர்டெயின்மென்ட் நிறுவனர்கள் வி.சரவணன் மற்றும் கோபிநாத் ரவி ஆகியோரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், ஏசிடிசி ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் ஆகியோருடன் இணைந்து, ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர்களுக்குத் தோல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லக்ஷ்மி அறக்கட்டளையுடன் இணைந்து இந்தப் போட்டி நடைபெற்றது. வெறும் அழகுப் போட்டியாக மட்டும் இல்லாமல், துன்பங்களில் இருந்து வலிமையுடன் மீண்டு வந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் அழுத்தமான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது.
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:
– ஆதரவு மற்றும் அதிகாரமளித்தல்: ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர்களை அன்புடன் வரவேற்றது, அவர்களுக்கான ஊக்கம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை இந்த நிகழ்வு செய்து காட்டியுள்ளது.
– புகழ்பெற்ற பிரபலங்களால் அங்கீகாரம்: இந்த நிகழ்வில் புகழ்பெற்ற நடிகை எமி ஜாக்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வலு சேர்த்தார் மற்றும் மிஸ் போட்டியின் வெற்றியாளரான அஷ்விகாவுக்கு முடிசூட்டினார். நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான நடிகை ஸ்ரேயா சரண், மிஸஸ் போட்டியின் வெற்றியாளரான நம்ரதா சிங்கிற்கு முடிசூட்டினார்.
– ஆசியாவின் கோல்டன் ஃபேஸ் அறிமுகம்: இந்த நிகழ்வு ஆசியாவின் கோல்டன் ஃபேஸை அறிமுகப்படுத்தியது. மேலும் இது அழகு, ஊக்கம் மற்றும் அதிகாரமளிப்பதற்கான பரந்த தளத்தை ஏற்படுத்தியுள்ளது.
– பிராண்ட் அம்பாசிடரின் தாக்கம்: மதிப்பிற்குரிய பிராண்ட் அம்பாசிடரான நடிகை பார்வதி நாயர், இந்தப் போட்டியின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அதன் காரணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
– உன்னதமான காரணம்: தென்னிந்தியாவின் கோல்டன் ஃபேஸ் போட்டி 2024 அழகு, மகிழ்ச்சி மற்றும் வலிமை ஆகியவற்றோடு ஆசிட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தளத்தை உருவாக்கும் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
நேர்த்தியும் நோக்கமும் கொண்ட இந்த மதிப்புமிக்கப் போட்டி, ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பைத் தொடர உறுதியளித்துள்ளது.