‘ஹரிதாஸ்’ படத்திற்கு தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம்

2013 ஆம் ஆண்டில் Dr.ராமதாஸ் தயாரிப்பில், கிஷோர், சினேகா, சூரி மற்றும் பலர் நடித்து, எனது இயக்கத்தில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தை மாணவர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காண தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

கருத்துள்ள திரைப்படம் எனப் பாராட்டி மாணவர்களிடம் சென்று சேர்க்கும் தமிழ்நாடு அரசுக்கும், நல்ல திரைப்படத்தை என்றும் கொண்டாடும் மக்களுக்கும், இத்திரைப்படத்தை மக்களிடம் நல்முறையில் சேர்த்து இன்றும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு இத்திரைப்படம் சென்று சேர்வதில் இப்படத்தின் இயக்குநராக பெருமகிழ்ச்சி.

11 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரையிலும் இந்தப்படத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசி வாழ்த்தி வரும் அனைவருக்கும் நன்றி. அது எனக்கு இன்னும் உத்வேகத்தைத் தருகிறது.

கூடியவிரைவில் இன்னொரு நல்ல படைப்போடு உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்
GNR.குமரவேலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top