இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.
மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தில் இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.
அவருக்கு பிறகு பேசிய,” கலை இயக்குனர் திரு லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது,”நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்,அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத்துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று பேசினார்.
அடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் தியாகராஜன்,” ஊடகத்துறையினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார். இயக்குனர்களுக்கும், கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும் இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி”, என்றார்.
இங்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் திரு.கே எஸ்.ரவிக்குமார், ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது முதல் படமான ‘வாலு’ படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உதவி இயக்குனர்களும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி,வணக்கம்”, என்றார்.
ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,”கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி”, என்றார்
படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ் அவர்கள் பேசும் பொழுது,”வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த பட வெளியீடு.இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த வாய்ப்பு அளித்தமைக்கு விஜய்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி. எங்களுடைய முழு ஆதரவையும் இந்த படத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்”, என்று பேசினார்.
படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது,”ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!”, என்றார்.
அடுத்ததாக பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும் பொழுது,”இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர் நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குனர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின் போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். புதுவிதமான ஹாரர் திரைப்படமான, இத்திரைப்படத்தை மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி வெளியிடுவதற்கு தனி தைரியம் வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓடிடியில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி”, என்று பேசினார்.
அடுத்ததாக தியா பேசும்பொழுது,”வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன். தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி”,என்று பேசினார்.
நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது,”தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகி ஹன்ஷிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பேசினார்.
தங்கதுரை பேசும் பொழுது,”திரு.கே.எஸ்.ரவிக்குமா
இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது,”நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்,அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்
இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள். சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறினார்.கே.எஸ்.ரவிக்குமார்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது,” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார்.அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்”, என முடித்தார்.
இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.