வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ பான்-இந்தியா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘காஜு பொம்மா’ (Gaaju Bomma) அக்டோபர் 6 அன்று வெளியாகிறது.
தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடைபெறும் அரட்டையை வெளிப்படுத்தும் அழகு ததும்பும் இந்த காணொலியில், அப்பா-மகள் பாடல் எப்போது வெளியாகும் என்று கியாரா கண்ணா கேட்க, அவரை காஜூ பொம்மா என்று அழைப்பதோடு, இது தான் பாடலின் அடிநாதமாக அமையும் என்கிறார் நானி. ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ஷௌர்யுவ் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கின்றனர்.
முழு நீள குடும்ப படமான ‘hi நான்னா’, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.
நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா