ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 – சீஸ்ஃபயர்- இந்த திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து, புதிய வரலாற்றை எழுதி வருகிறது. ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், வார இறுதியில் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படம், ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி உள்ளது. படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து, இதற்கு முன்னரான பல பெரிய சாதனைகளின் சாதனையை முறியடித்தது. மேலும் இத்திரைப்படம் அற்புதமான ஓப்பனிங்கைப் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியான இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 295.7 கோடி ரூபாயை வசூலித்து, தொடர்ந்து பெரிய திரைகளில் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் இப்படத்திற்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் ‘டிக்கெட் விண்டோ’விலும் தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தனது இடத்தை மிகப்பெரிய வித்தியாசத்துடன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் வார இறுதியில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 402 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
Prabhas' 'Salaar' trailer to be out on September 6: Report - India Todayஇத் திரைப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் மேல்நோக்கி செல்வதை காட்டுகிறது. இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் பார்வையாளர்கள் பதிவு செய்த டிக்கெட்டுகள் குறித்து ‘டிக்கெட் விண்டோ:வில் இதன் சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் செய்யும் என்பதையும் உறுதி செய்கிறது.

இந்தத் திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு படைப்புகளை பார்வையிடும் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய படைப்பின் சான்றாகவும் திகழ்கிறது.

இந்தத் திரைப்படம்… ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி… படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் காட்சி அமைப்பு குறித்தும், பிரசாந்த் நீல்- பிரபாஸ் கூட்டணியின் கடுமையான உழைப்பு குறித்தும் விமர்சர்களிடமிருந்தும் ஏகோபித்த அன்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.

‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ திரைப்படம் தற்போது உலக அளவில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ள நிலையில்.. ‘சலார் பார்ட் 2- சௌரியங்க பர்வம்’ படத்தின் தொடர்ச்சிக்கான களத்தையும் அமைத்துள்ளது. கான்சாரின் வாழ்க்கையை… மிகப் பெரிய ஆக்சன் நிறைந்த உலகத்தை… பிரசாந்த் நீல் தன்னுடைய படைப்பில் வழங்கிய விதம்… அனைத்து தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் அன்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயரி’ல் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகி, தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top