
வார் (2019) படத்திற்கு பிறகு ஒரே நாளில் 40 கோடிகளைத் தொட்ட ஹிருத்திக் ரோஷனின் 2வது படமாக ஃபைட்டர் மாறி உள்ளது. மேலும் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படம் வசூல் வேட்டை செய்து வருகிறது. இப்படம் இப்போது ஆஸ்திரேலியாவில் ஹிருத்திக் ரோஷனின் அதிக வசூல் செய்த படமாக மாற உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான பதான் படத்திற்கு பிறகு, குடியரசு தினத்தில் வெளியாகி அதிக வசூல் செய்த 2வது படமாக ஃபைட்டர் இடம் பெற்றுள்ளது. மேலும், ஹிருத்திக் ரோஷனின் கேரியரில் ஒரே நாளில் ரூ.40 கோடி வசூலித்த 2வது படமாக ஃபைட்டர் உள்ளது. இதற்கு முன்பு, வார் படம் வசூல் செய்து இருந்தது.
ஹிருத்திக் ரோஷனின் தொடர்ச்சியான பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் தற்போது ஃபைட்டர் இடம்பெற்றுள்ளது.ஏனெனில் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஹிருத்திக்கின் தொடர்ச்சியான 10 வது படம் ஆகும். 2001ல் உலகளாவிய வெற்றியான “கபி குஷி கபி கம்” உடன் இந்த வசூல் வேட்டை தொடங்கியது. 2000 ஆண்டு காலகட்டத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்வது மிகப்பெரிய சாதனையாகும். கபி குஷி கபி கம், க்ரிஷ், தூம் 2 மற்றும் ஜோதா அக்பர் ஆகிய நான்கு படங்களின் மூலம் ஹிருத்திக் ரோஷன் இந்த சாதனையை செய்தார்.
ஹிருத்திக் ரோஷனின் நடப்பில் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்த படங்களில் பட்டியல்:
14. போராளி