கடைசி உலகப் போர் – விமர்சனம்

2028- ல் கதை நடப்பது போல் காட்சியமைத்துள்ளனர். நாசர் முதலமைச்சராக இருக்கிறார். நாசருக்கு மச்சான் மற்றும் பினாமியாக நட்டி இருக்கிறார். நட்டியின் சொல்லும் ஐடியாக்களை நம்பி நாசர் செயல் பட்டு வருகிறார். உலகமே இரண்டாக பிரிந்து இருக்கும் சூழ்நிலை. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிந்துள்ளது. இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நாசரின் மகளான அனேகாவை , ஹிப்ஹாப் ஆதி காதலிக்கிறார். இருவரும் நன்றாக பழகி வரும் சூழலில் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர் ரிப்பப்ளிக் நாடுகள். தொலைத்தொடர்பு சாதனங்கள் , செயற்கை கோள்கள் , தகவல் தொடர்பு நெட்வொர்க் அனைக்கும் துண்டிக்கப்படுகிறது. சென்னை மொத்தமும் அழிக்கப்படுகிறது. இதற்கு பிறகு என்ன ஆனது? ரிபப்ளிக் நாடு சென்னையை கைப்பற்றியதா? நட்டி அவர் நினைத்த காரியத்தை நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.Kadaisi Ulaga Por' movie review: Hiphop Tamizha Adhi's ambitious dystopian film bites off more than it can chew - The Hinduபடத்தின் முதல் நாயகனாக இருப்பவர் நட்ராஜ் கதையை சொல்ல ஆரம்பத்திலிருந்து படம் முழுவதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதையின் நாயகனாக அடுத்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்து நடித்துள்ளார். அனேகா கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.நகைச்சுவை நடிகர்களாக முனிஷ்காந்த், சிங்கம்புலி, ஷாரா கொடுத்த வேலையை நன்றாக நடித்துள்ளனர்.நாசர், தலைவாசல் விஜய் தங்களின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.Hiphop Tamizha Aadhi's 'Kadaisi Ulaga Por' trailer: Incredible filmmaking on a limited budget! - Tamil News - IndiaGlitz.comஹிப்ஹாப் ஆதியின் இசையாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் அது இளம் தலைமுறைகளை கவரும் விதம் இருக்கும். அந்த வகையில் ஒரு சென்சிட்டிவ் மற்றும் எதிர்காலத்துக்காக ஒரு கதையை கற்பனையாக சொன்ன விஷயத்துக்கு பாராட்டுகள். படத்தின் மற்றொரு பெரிய பலம் VFX காட்சிகள் ஆகும். சர்வதேச தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பாராட்டுகள். படத்தின் எமோஷனலான காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒட்டவில்லை. படத்தின் காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

போர் காட்சிகளை மிகவும் திறமையாக கையாண்டுள்ளார் அருண்ராஜா படத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரியபலம் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top