மஹாசிவராத்திரியில் வெளியாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஷ்ணு மஞ்சுவின் மாபெரும் இந்திய காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்ட இந்திய காவிய திரைப்படமாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மஹாசிவராத்திரியான புனித நாளான இன்று ‘கண்ணப்பா’- வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது, படத்திற்கு சிவபெருமானின் அருள் கிடைத்ததற்கு சமமாகும். சிவபெருமானின் தீவிர பக்தர் மற்றும் மாபெரும் போர் வீரனனின் வீரமிக்க வாழ்க்கை படைப்பான கண்ணப்பாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீடும் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பக்த கண்ணப்பா கதாபாத்திரத்தில் ஈடு இணையற்ற கம்பீரம் மற்றும் வீரத்துடன் நடிக்கும் விஷ்ணு மஞ்சு இடம்பெற்றுள்ளார். இந்த பிரமிக்க வைக்கும் காட்சியில், விஷ்ணு மஞ்சு வில்லும் அம்பும் ஏந்திய நிலையில், ஒரு நீர்வீழ்ச்சியில் இருந்து கம்பீரமாக வெளிப்பட்டு, தனது இலக்கை நோக்கி தனது வலிமையைக் கட்டவிழ்த்துவிடத் தயாராக இருக்கிறார். பக்த கண்ணப்பனின் பாத்திரத்தை வரையறுக்கும் ஆழமான பக்தி மற்றும் உறுதிப்பாட்டின் குறிப்பையும், செயல் நிரம்பிய காட்சிகளின் சாரத்தையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் விளக்குகிறது.
மோகன் பாபு, மோகன்லால், பிரபாஸ், சரத்குமார் மற்றும் பிரம்மானந்தம் போன்ற பிரபலங்களைக் கொண்ட ‘கண்ணப்பா’ குழு, 600 க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்களுடன் நியூசிலாந்தின் பசுமையான அழகுக்கு மத்தியில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகிறது. சிவபெருமானின் பக்தி கொண்ட பக்தரான ‘பக்த கண்ணப்பா’வின் பிரமிக்க வைக்கும் கதையாக உருவாகி வரும் இப்படம், சிவபெருமானின் இறுதி பக்தராக மாறிய நாத்திகர் மற்றும் அச்சமற்ற போர்வீரரின் பயணத்தின் உண்மையான இந்திய காவியமாகவும் உருவாகிறது.

இது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில், “கண்ணப்பாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் நிறைந்த ஒரு நம்ப முடியாத பயணம். இது ஒரு படம் என்பதைத் தாண்டியது. கண்ணப்பா ஒரு போர்வீரனின் ஆன்மாவை ஆழமாக ஆராய்கிறார். இதைக் கொண்டு வரும்போது வெளிப்பட்ட மந்திரத்தை வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மகாசிவராத்திரியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிடுவது சிவபெருமானின் ஆசிர்வாதம் நம்மை வழிநடத்துவது போல் உணர்கிறேன்.

கடந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர கோவிலில் அறிவிக்கப்பட்ட கண்ணப்பா படத்திற்கு பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் கெச்சா கம்பக்டீ வடிவமைக்க,  நடன காட்சிகளை மாஸ்ட்ரோ பிரபுதேவா  வடிவமைக்கிறார்.  முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top