ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும் தயாரிக்கிறார்கள்.
இந்தியத் திரையுலகின் ஸ்டண்ட் பிரிவில், அன்பறிவ் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஸ்டண்ட் இயக்குனர் என்ற இடத்திலிருந்து அவர்கள் திரைப்பட இயக்குனர்களாக முன்னேறுவது அவர்களுடைய அர்ப்பணிப்புக்கும், திறமைக்குமான நற்சான்று. KH237 திரைப்படத்தின் வழியாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சிறந்த திரைப்படப் பங்களிப்பு, இன்னும் மேம்படும். அன்பு மணியும், அறிவு மணியும் இந்தப் படத்தை இயக்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.