பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

பாக்யராஜ் நடிப்பு இயக்கத்தில் 90களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் பான்-இந்தியா கதையம்சம் கொண்டவை என்பதால் அவை மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன் இப்படத்தின் கதையை வெகுவாக ரசித்து இதில் நடிக்க சம்மதித்தார்.
Selvaraghavan, Sunil and others team up for Tamil political film- Cinema expressயோகி பாபு, ‘புஷ்பா’ மற்றும் ‘ஜெயிலர்’ புகழ் சுனில், ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், “விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top