லப்பர் பந்து – விமர்சனம்

தினேஷ், ஊர் கிரிக்கெட்டில் பெரும் புள்ளியாக இருக்கிறார். அவரை யாரும் தோற்கடிக்க முடியாது நபராக இருக்கிறார். போட்டியில் அனைத்து பந்தையும் 4, 6 என்று விலாசும் அணி வீரராக திகழ்கிறார். இவரை அணியில் கெத்து என அழைக்கின்றனர்.

மறுபக்கம் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் மீது அளவு கடந்து ஆர்வம் கொண்ட நபர். பந்து வீச்சில் மிகவும் திறமையானவராக திகழ்கிறார். ஹரிஷ் கல்யாண் அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் அணி யார் கூப்பிட்டாலும் சென்று விளையாடி வருகிறார். விளையாடும் அணிகளில் திறமையான பந்து வீச்சின் மூலம் நல்ல பெயர் வாங்குகிறார்.Harish Kalyan interview: On 'Lubber Pandhu,' 'Diesel' and his take on stardom - The Hinduதினேஷின் மகளான சஞ்சனாவை ஹரிஷ் காதலிக்கிறார். ஆனால் தினேஷின் மகளென தெரியாமல் ஹரிஷ் கல்யாண் காதலித்து வருகிறார். ஒருக்கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் , தினேஷ்அணிக்கு எதிராக விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது தினேஷை பந்து வீசி தோற்கடிக்கிறார். இது ஒரு பெரிய கைகலப்பில் முடிகிறது. இதற்கடுத்து என்ன ஆனது? இவர்களுக்கு இடையே உள்ள பகை தீர்ந்ததா? இவர்கள் காதல் கைக்கூடுமா? என்பது படத்தின் மீதிக்கதை.|

அட்டக்கத்தி தினேஷ் சிறப்பாக வயதான கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப திறமையான நடிப்பை வழங்கியுள்ளார். மனைவிடம் அன்பாக நடந்துக் கொள்வது. கிரிக்கெட் அணியில் கெத்து கதாப்பாத்திரமாகவே கெத்து காட்டியுள்ளார். மறுபக்கம் ஹரிஷ் கல்யாண் துறுதுறுவென இளைஞனாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.Lubber Pandhu trailer: Harish Kalyan, Attakathi Dinesh set for exciting face-off | Entertainment Videos - News9live

சஞ்சனா மற்றும் ஸ்வஸ்விகா கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர். மற்ற நடிகர்களான பால சரவணன், காளி வெங்கட், தேவ தர்ஷினி, டி.எஸ்.கே மற்றும் ஜென்சன் திவாகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு கிரிக்கெட் அணியின் பின்புலத்தை மையமாக வைத்துக் கொண்டு இளைஞனின் வாழ்க்கையை பதிவு செய்தது மிக அற்புதமாக கையாண்டுள்ளார். படத்தின் கதாப்பாத்திர தேர்வை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். திரைக்கதை படத்திற்கு பெரிய பலம் பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் சலிப்பு தட்டாமல் நகர்கிறது. எமோஷனல் காட்சிகள் மிக நெருக்கமாக பார்வையாளர்களிடம் கனெக்ட் ஆகிறது.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு இதமாக அமைந்துள்ளது. சில்லாஞ்சிருக்கியே பாடல் படத்தில் அழகாக அமைந்துள்ளது.தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதில் பெரிதும் உதவி செய்துள்ளது.ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top