நந்தன் – விமர்சனம்

வணங்கான்குடி கிராமத்தில் நடைப்பெறுகிறது. சசிகுமார் அந்த ஊரின் கீழ் தட்டு மக்களாக அவரது குடும்பம் வாழ்ந்து வருகின்றனர். அதே ஊரில் பாலாஜி சக்திவேல் மேல்தட்டு மக்களாக வாழ்கிறார். அந்த ஊராட்சி மன்ற தலைவராக போட்டியே இல்லாமல் தலைமையில் பாலாஜி சக்திவேலின் குடும்பம் ஆண்டு வருகிறது.

அந்த குடும்பத்தை எதிர்த்து போட்டியிட்டாலோ, இல்லை முயற்சி செய்தால் கூட ஆதிக்கம் உடையவர்கள் அவர்களை சாகடித்து விடுகின்றனர். சசிகுமார் தீவிர விசுவாசியாக பாலாஜி சக்திவேலிடம் இருக்கிறார்.

இம்முறையும் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் மகிழ்ச்சியில் சக்திவேல் பாலாஜி இருக்கும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது. வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.Nandhan Movie Review: A good-intentioned misfire that needed to have a lot more than just its heart in the right place | Movie-review News - The Indian Expressஇனி தான் போட்டியிட முடியாது என தெரிந்துகொண்ட பாலாஜி தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தன் சார்பாக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்கிறார். தன் சார்பாக சசிகுமாரை நிற்க வைத்து அவரை வெற்றிபெற செய்கிறார்.

வெற்றிப்பெற்ற பின் அவரை ஒரு டம்மியாக வைத்துக் கொண்டு பாலாஜி சக்திவேல் அவரது ராஜியத்தை ஆண்டு வருகிறார். சசிகுமாரை எந்தளவு கீழ் மட்டமாக நடத்த முடியுமோ அந்தளவுக்கு நடத்துகிறார். ஒருக்கட்டத்தில் சசிகுமாருக்கு கோபம் வருகிறது. அவரை எதிர்க்க நினைக்கிறார்? இதற்கடுத்து என்ன ஆனது? சசிகுமார் மற்றும் பாலாஜி சக்திவேல் இடையே என்ன பகை?Nandhan Movie (Sep 2024) - Trailer, Star Cast, Release Date | Paytm.comவித்தியாசமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் சசிகுமார். பாலாஜி சக்திவேல் தனெக்கென உரிய பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி சிறப்பாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரமும் முழுமை பெறாமலேயே உள்ளது.

வாழ்வதற்கே அதிகாரம் எவ்வளவு முக்கியம் என உணர்ந்து கொள்வதை தான் உணர்ச்சிவசமான ஒரு படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் இரா சரவணன். படத்தின் சசிகுமாரின் கதாப்பாத்திரத்தை இன்னும் சரியாக எழுதியிருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் காட்சிகள் மீண்டும் மீண்டும் ரிபீட் ஆவதால் பார்வையாளார்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் எமோஷனல் காட்சிகளை இன்னும் நேர்த்தியாக சொல்லி இருக்கலாம்.ஜிப்ரான் இசையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் கேட்கும் ரகம்.சரண் திறமையாக ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.இரா எண்டர்டெயின்மண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top