மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அந்த திரை முன்னோட்ட காட்சியில் நாஞ்சில் சம்பத், ‘சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே அவ்வையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா’ என்று வசனம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது!
மேலும், ‘நாங்க குடிக்கிற காசுல தான், உங்களுக்கு சம்பளமே தராங்க’ என போலீசாரை பார்த்து மன்சூர் அலிகான் கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது!
டாஸ்மாகில் 10′ ரூபாய் அதிகம் வாங்குவதை எதிர்த்து, ,’மது பிரியர்கள் சங்கம்’ ஆரம்பித்து மன்சூர் அலிகான் போராடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது!
“சரக்கு” திரை முன்னோட்டம் சர்ச்சையை கிளப்பும் என்கிறார்கள், டிரைலரை https://youtu.be/SMiOaVTgfH0?
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் நடித்து, தயாரித்துள்ள “சரக்கு” படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்கியுள்ளார்!