லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள “கல்கி 2898 கிபி”  படத்துடன் “இந்தியன் 2” டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது.

இன்று  அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் “கல்கி 2898 கிபி” திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படங்களில் ஒன்றான “கல்கி 2898 கிபி” படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்,  அப்படத்துடன் “இந்தியன் 2” படத்தின் டிரெய்லர் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. மேலும் திரையரங்குகளில் டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், அமோக வரவேற்பு கொடுத்து, கொண்டாடி வருகின்றனர்.

மிகப்பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தியப் புராணக்கதையின் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக, உருவாகியிருக்கும் “கல்கி 2898 கிபி” திரைப்படம், இன்று உலகமெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரைப்படம் காணச்சென்ற ரசிகர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சியாக “இந்தியன் 2” டிரெய்லர் அமைந்துள்ளது. “கல்கி 2898 கிபி” திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் , மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில்,  இந்தியன் 2 டிரெய்லரும் அந்தந்த மொழிகளில் வெளியாகி இருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தினை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.  இப்படம் உலகமெங்கும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.

இயக்குநர்: ஷங்கர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்
ஆக்‌ஷன் அன்பறிவ் – ரம்ஜான் புல்லட் – அன்ல் அரசு – பீட்டர் ஹெயின் – ஸ்டண்ட் சில்வா – தியாகராஜன்
VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்
நடன இயக்குனர் போஸ்கோ-சீசர் – பாபா பாஸ்கர்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
மேக்கப் – வான்ஸ் ஹார்ட்வெல் – பட்டணம் ரஷீத் – ஏ.ஆர். அப்துல் ரசாக்
ஆடை வடிவமைப்பு :  ராக்கி – கவின் மிகுல் – அமிர்த ராம் – எஸ் பி சதீசன் – பல்லவி சிங் – வி.சாய்
DI: ரெட்சில்லிஸ்
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்
GKM. தமிழ் குமரன் – M. செண்பகமூர்த்தி
தயாரிப்பு: சுபாஸ்கரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top