விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்பு: வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’

பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் இறுகப்பற்று,  தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் வசூலிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
தேர்ந்த நடிகர்களும், சுவாரசியமான திரைக்கதையும் கொண்ட இந்த இதமான கதை வெளியான நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் இப்படம் குறித்த சிறப்பான விமர்சனங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். வார இறுதியைத் தாண்டி, வார நாளான திங்கட்கிழமை அன்று கூட திரையரங்குகளில் இறுகப்பற்று திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரிசை கட்டியுள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு முதல் நாள் வசூலை விட 4வது நாள் வசூல் அதிகமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மல்டிபிளக்ஸ்களில் இப்படத்துக்கு பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான காட்சிகளும் திரையிடப்படுகின்றன. இது படத்தின் பொழுதுபோக்கு மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், எங்கள் அன்பான பார்வையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை, பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு வழங்கும் தரமான திரை அனுபவங்களுக்கு

இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இறுகப்பற்று திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள அபாரமான வரவேற்பும், பார்வையாளர்கள் திரைப்படத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளதும்  எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த வெற்றி சிறிய, கதாபாத்திரம் சார்ந்த, ஆழமான கதைகளின் திறனை நிரூபிக்கிறது. வெற்றி என்பது பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, கதை சொல்லும் கலையிலும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இந்த வெற்றி எங்கள் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனே” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசுகையில், “இறுகப்பற்று போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சவாலான ஆனால் நிறைவான அனுபவமாக இருந்தது. மேலும் இது பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிய பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
இறுகப்பற்று குழுவினர் அனைத்து விதமான ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். உங்களின் உற்சாகமும் ஊக்கமும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமில்லை. இறுகப்பற்று என்கிற அனுபவத்தை இன்னும் ருசிக்காதவர்கள் உடனே உங்கள் அருகிலுள்ள திரையரங்கிற்குச் சென்று, தமிழ் சினிமாவின் இந்த பெருமைமிகு படைப்பின் வெற்றியில் பங்குபெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top