தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் ரக்ஷ் ராமின் பிறந்த நாளில் வெளியான ‘பர்மா’ பட போஸ்டரில்.. அவர் ரத்தம் தோய்ந்த புது அவதாரத்தில் தோற்றமளிக்கிறார்.
தொலைக்காட்சி தொடரான ‘கட்டிமேளா’ மூலம் பிரபலமானவர் நடிகர் ரக்ஷ் ராம். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘பர்மா’ படக் குழு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பர்மா’ திரைப்படத்தில் ரக்ஷ் ராமின் தோற்றம்- படத்தைப் பற்றிய ஒரு புதிய பார்வையை வழங்கி இருக்கிறது.
‘பர்மா’ படத்தின் போஸ்டர் – புதிய வடிவிலான விருந்தை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்த போஸ்டரில் இரண்டு கோடாரிகளை ஏந்தியபடி ரத்தம் தோய்ந்த தோற்றத்தில் ரக்ஷ்ராம் தோன்றி.. சக்தி வாய்ந்த ஒரு பஞ்ச்சை அடிக்கிறார். ‘பர்மா’ – முழு நீள கமர்சியல் பொழுதுபோக்கு படைப்பாக உருவாக உள்ளது. இந்த திரைப்படம் தொலைக்காட்சி நடிகர் ரக்ஷ் ராமை ஒரு பான் இந்திய நட்சத்திரமாக மாற்றி உள்ளது. இப்படத்தின் முதன்மை நாயகனான ரக்ஷ் ராம், தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ஆஞ்சநேயா நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்து, இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
இயக்குநர் சேத்தன் குமார் ‘பர்மா’ திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு வி. ஹரிகிருஷ்ணா இசையமைக்கிறார். இந்தக் கூட்டணி இதற்கு முன் ‘பஹதூர்’ மற்றும் ‘பஜ்ரங்கி’ போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது. தற்போது ‘பர்மா’ திரைப்படத்திற்காக மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
‘ஜேம்ஸ்’ எனும் திரைப்படத்தைத் தவிர, இயக்குநர் சேத்தன் குமாரின் அனைத்து திரைப்படங்களும், ‘பா’ என்ற எழுத்தில் தொடங்குவது தான் அவரது வெற்றி பெற்ற சினிமா பாணியாகும். ‘பஹதூர்’, ‘பஜ்ரங்கி’, ‘பாரதே’ என அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தவை. அவரது சமீபத்திய படமான ‘பர்மா’ படத்தின் மூலம் சேத்தன் குமார் மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறுவதற்கு தயாராகி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘பர்மா’ திரைப்படத்தில் நடிகர் ஷவர் அலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்திய அளவிலான வெளியீட்டிற்கு தயாராகி வரும் இப்படம், பிரம்மாண்டமான படைப்பாகவும் உருவாகி வருகிறது.