ரசவாதி – விமர்சனம்

கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன். இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன் சுஜித் சங்கர்.

அடிக்கடி அந்த ரெஸார்டிற்கு போகும் அர்ஜுன் தாஸ் தன்யா ரவிச்சந்திரன் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் காதலித்து வருகின்றனர். புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்த சுஜித் சங்கர் ஒரு சைக்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் அவரது வீட்டில் அர்ஜூன் தாஸின் புகைப்படத்தை வைத்திருக்கிறார். அதன்பிறகு அவரின் காதலுக்கு மிக எதிரியாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் நடுவில் என்ன சம்பந்தம் இருக்கிறது. இன்ஸ்பக்டர் சுஜின் வாழ்க்கைக்கும் அர்ஜூன் தாஸ் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? ஏன் இன்ஸ்பக்டர் அர்ஜூன் தாஸின் காதலை பிரிக்க நினைக்கிறார்? இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.Rasavathi' movie review: This predictable revenge drama dearly misses Santhakumar's Midas touch - The Hinduஅர்ஜூன் தாஸ் அவரின் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இம்முறை ஒரு குறும்பு தனத்துடன் நடித்துள்ளார். கதாநாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகிய இருவரும் அவரக்ளின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கும் சுஜின் சங்கர் நடிப்பில் மிரட்டியுள்ளார். அவரது வித்தியாசமான முக பாவனையில் மனநல சரியில்லாதவர் போல் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் சாந்தகுமார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். படத்தின் நீள அளவு மைனஸாக இருக்கிறது. படத்தின் காலளவை சிறிது குறைத்திருக்கலாம்.Rasavathi (2024) Movie Review Starring Arjun Das And Tanyaகொடைக்கானல் அழகையும் படத்தின் பரப்பரப்பை கதைசூழழுக்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவை சிறப்பாக மேற்கொண்டுள்ளார் சரவணன் இளவரசு மற்றும் சிவா குத்துப்பாட்டு சத்தத்தை மட்டுமே பலமாக கொண்ட தமனின் பின்னணி இசை ரசவாதி படத்தில் புதுமையான அனுபவமாக இருக்கிறது. ஹீரோ ஹீரோயின் இன்ட்ரோவில் பாடல்களுக்கு பதிலாக வெறும் பின்னணி இசையை மட்டும் பயன்படுத்தி காட்சியில் புதுமையை செய்திருக்கிறார்.சாந்தகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top