விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.Image

படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் தனது யூடியூப் சீரிஸ் ‘காதல் டிஸ்ஷன்சிங்’ மற்றும் ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’-ன் மூன்றாவது எபிசோட் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவர்.

‘ரோமியோ’ தெலுங்கில் “லவ் குரு” என்ற பெயரில் வெளியாக உள்ளது.

‘பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top