ராக்கெட் டிரைவர் – விமர்சனம்

கதாநாயகனான விஷவத் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மீது மிகப்ப்பெரிய ஆர்வம் இருக்கிறது ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. இந்த வாழ்க்கை சூழலில் ஒருநாள் விஷவத் ஆட்டோவில் நாகா விஷால் வழி கேட்கிறார். சென்னையில் யாரையும் தனக்கு தெரியாது நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் என நாகா விஷால் கேட்கிறார்.

அதன் பிறகு சில சூழ்நிலை மூலமாக நாகா விஷால்தான் சிறு வயது {ஏ.பி.ஜே அப்துல் கலாம் } என தெரிய வருகிறது. பின் எதற்காக கலாம் தற்பொழு நிகழ் காலத்திற்கு வந்துள்ளார். இவரை எப்படி இவருடை பழைய காலக்கட்டதிற்கு அனுப்ப முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு செல்கின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது? கலாமை அவருடைய பழைய காலக்கட்டத்திற்கு அனுப்பி வைத்தார்களா? கலாம் சென்னை வர காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் ஆட்டோ டிரைவர் ஆகவும், அறிவியல் ஆர்வலராகவும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் விஷ்வத். சிறுவயது அப்துல் கலாமாக நடித்து இருக்கும் நாகா விஷால் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். காத்தாடி ராமமூர்த்தி நகைச்சுவை காட்சிகளில் பிராமாதமாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். சுனைனா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சிறுவயது அப்துல் கலாம் தற்பொழுது உள்ள காலசூழலுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்த சங்கர். பதிரைப்படத்தின் முதல்பாதி தெளிவில்லாமல் நகர்கிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக நொர்கவுட் ஆகியுள்ளது. படத்தின் நேர அளவை குறைவாக வைத்தது சாமர்த்தியம்.

ரெஜிமல் சூர்யா தாமஸ்-இன் ஒளிப்பதிவு சிறப்பாகவும் படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளது.கௌஷிக் கிரிஷின் இசை படத்தின் பலம்.அனிருத் வல்லப் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top