ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் வெறித்தனமான இரண்டாவது பார்வை இப்போது வெளியாகியுள்ளது!

நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ‘கங்குவா’வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’, ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’, சமீபத்தில் வெளியான ‘பத்துதல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.Image

இன்று படக்குழுவினர் இந்தப் படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் பார்த்தவுடனேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. போஸ்டரில் சூர்யாவின் இரு தோற்றமும் பிரமாதமாக இருக்கிறது. சூர்யாவின் வசீகரமான திரை இருப்பு மற்றும் சக்திவாய்ந்த கண்கள் ரசிகர்களை இதில் அதிக அளவில் கவர்ந்தன. படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே இருக்கிறது.

‘கங்குவா’வின் உலகம் புதுவிதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் புதிய காட்சி அனுபவத்தை அளிக்கும். மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய மையமாக இருக்கும். இந்த பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பை முடித்தார்.

சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:

எடிட்டர்: நிஷாத் யூசுப்
ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்,
வசனங்கள்: மதன் கார்க்கி,
எழுத்தாளர்: ஆதி நாராயணா,
பாடல் வரிகள்: விவேகா – மதன் கார்க்கி,
தலைமை இணை இயக்குநர்: ஆர்.ராஜசேகர்,
ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன் (சூர்யா) & தட்ஷா பிள்ளை,
ஆடைகள்: ராஜன்,
நடனம்: ஷோபி,
ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்,
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு,
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா,
கிரியேட்டிவ் விளம்பரங்கள்: BeatRoute,,
டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டலி,
VFX: ஹரிஹர சுதன்,
3டி: பிரைன்வைர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ஆர்.எஸ். சுரேஷ்மணியன்,
தயாரிப்பு நிர்வாகி: ராமதாஸ்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.வி. தினேஷ் குமார்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.ஜி.ராஜா,
ஸ்டுடியோ கிரீன் CEO: G. தனஞ்செயன்,
இணை தயாரிப்பாளர்: நேஹா ஞானவேல்ராஜா,
தயாரிப்பு: கே.இ. ஞானவேல்ராஜா | வம்சி-பிரமோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top