SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5 வீடியோவின் சிறு துணுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்!!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம்  பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய அன்பான, அழகான திரை உலகத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை இது நிச்சயமாக அதிகரித்துள்ளது.  தற்போது ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் இப்போது டங்கி டிராப் 5, ஓ மஹி பாடலை வெளியிட தயாராகி வருகின்றனர்.  இந்த பாடலின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அதிலிருந்து ஒரு கிளிம்ப்ஸே  வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய #AskSRK அமர்வில், கிங் கான் இந்தப் பாடலைத் திரைப்பட ஆல்பத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டார், எனவே ரசிகர்கள் இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Dunki Drop 5: Shah Rukh Khan Explains Meaning Of His Film's Name In New Promoஷாருக்கான் நடிப்பில் டங்கி ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால்  பார்வையாளர்களை கவர்ந்திழுக்க தயாரிப்பாளர்கள் எந்த வாய்ப்பையும் தவற விடவில்லை. இதோ டங்கி டிராப் 5 இன்று அதன் வருகைக்கு தயாராகிவிட்டது!

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகிறது.

https://x.com/iamsrk/status/1734028995552067585?s=46&t=5RIwNRycJ8MV9YSxIBI6Fg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top