#AskSRK சமீபத்திய அமர்வில் தனது மகனுடன் படம் பார்க்க முடியாத ரசிகருக்கு ஜவான் டிக்கெட்டுகளை தள்ளுபடியில் வழங்கி, நெகிழவைத்த SRK . இந்த இனிமையான செயலைத் தொடர்ந்து, ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் *பை-ஒன்-கெட்-ஒன் டிக்கெட் இலவச சலுகையை அறிவித்துள்ளது

ரசிகர்களுடன் உரையாடும் #AskSRK அமர்வில் ஒரு ரசிகரின் இதயப்பூர்வமான வேண்டுகோளைக் கண்டார். டிக்கெட்கள் கிடைக்காத நிலையில் தனது மகனுடன் ஜவான் மாயாஜாலத்தை அனுபவிக்க முடியவில்லை என தெரிவித்த ரசிகருக்கு தனது ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் நிறுவனத்திடம் டிக்கெட்களில் அவருக்கு தள்ளுபடி வழங்க சொல்லி நெகிழ வைத்தார். மேலும் ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் *பை-ஒன்-கெட்-ஒன்* டிக்கெட் இலவச சலுகையை அறிவிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். இதன் மூலம் ரசிகர்கள் ஒரு டிக்கெட் விலையில்,  இரண்டு பேர் படம் பார்க்கலாம்.

SRK இன் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜவானின் தயாரிப்பாளர்கள் உடனடியாக, ஜவான் திரைப்படத்திற்கு  பை-ஒன்-கெட்-ஒன் டிக்கெட் சலுகையை செயல்படுத்தியுள்ளனர், இதன் மூலம் அனைவரும் தங்கள் அன்புக்குரியவர்களை அழைத்து வர ஊக்குவித்து, குடும்பங்கள் ஒன்றாக திரைப்படத்தை அனுபவிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது ஜவான் தயாரிப்பு நிறுவனம்.

‘ஜவான்’ படத்தின் வெளியீடு மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது, பெரிய திரையில் படங்களைப் பார்க்கும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் மீண்டும் தூண்டியது. ஜவானின் பிரமாண்ட உருவாக்கம் மற்றும் மாயாஜால மேக்கிங் இந்தப்படத்தை திரைப்பட ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியதாக ஆக்கியது. எல்லைகளைத் தாண்டி, சினிமாவின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் ‘ஜவான்’ திரைப்படம் அனைத்துத் திரையுலகப் பிரியர்களுக்கும் திருவிழாவாகிவிட்டது. ஷாருக்கானின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து கொண்டே செல்கிறது! ‘ஜவான்,’ உலகத்தை புயலாக தாக்கியது, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை  பிரமிக்க வைத்த இப்படம் உலகம் முழுக்க சாதனைகள் படைத்து வருகிறது.

By-One-Get-One Ticket என்ற ஜவான்  சலுகையானது, இந்தியா முழுவதும் செப்டம்பர் 28 (வியாழன்), 29 ஆம் தேதி (வெள்ளி) மற்றும் 30 ஆம் தேதி (சனி) தேதிகளில் டிக்கெட் வழங்கும் ஆன்லைன் தளங்களில், ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில், அனைவரும் பெறலாம். ‘ஜவானின்’ மகிழ்ச்சியை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் நீட்டித்து, சினிமாவின் மாயாஜாலத்தைப் பகிர்ந்துகொள்ள அவர்களை அழைப்பதற்காகவே  இந்த இனிமையான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது!

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top