இந்தியா, ஜூலை XX, 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் அடுத்து வரவிருக்கும் ஒரிஜினல் தெலுங்குத் சீரிஸான ‘பஹிஷ்கரனா’ சீரிஸ் ஜூலை 19 அன்று ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முகேஷ் பிரஜாபதி இயக்கத்தில், Pixel Pictures Pvt Ltd சார்பில், பிரசாந்தி மாலிசெட்டி தயாரித்துள்ள இந்த சீரிஸில் , அஞ்சலி, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். ‘பஹிஷ்கரனா’ என்பது ஒரு விபச்சாரியின் அழுத்தமான பயணத்தை விவரிக்கும் கதை. இந்தக் கதை 1990களின் கிராமப்புற குண்டூரின் பின்னணியில் விரிகிறது. அங்கு விபச்சாரியாக வாழும் நாயகி, அவளின் உண்மையான வரலாறு, அவளுக்கு நிகழும் சம்பவங்கள் என இக்கதை அழுத்தமான உணர்வுகளின் பின்னணியில் மறக்க முடியாத அனுபவம் தரும் தொடராக உருவாகியுள்ளது இந்த சீரிஸ்.
1990களில் பெத்தபள்ளி, கிராமத்தில் வசிக்கும் எளிமையான பெண்ணான தர்ஷி , வேலையிலிருந்து திரும்பவில்லை எனும் போது, சாதாரணமாகத் தோன்றும் ஒரு நாள் இருண்டதாக மாறுகிறது. இந்த நிகழ்வு விபச்சாரி புஷ்பா, மற்றும் தர்ஷியின் மனைவி லக்ஷ்மி என இரு பெண்களின் வாழ்வில் இடியாக இறங்குகிறது. இவர்களுக்கு இடையிலான உறவுகளை வெளிப்படுத்தும்படி அடுத்தடுத்து உடையும் ரகசியங்கள் திடுக்கிட வைக்கின்றன. காதல், துரோகம் மற்றும் விதியின் அதிர்ச்சியூட்டும் திருப்பங்களின் வழியே இந்தக்கதை பயணிக்கிறது. கிராமத்தின் சர்பஞ்ச், சிவயா, இந்த சிக்கலான நாடகத்தில் முக்கிய நபராக மாறுகிறார், அவரது நடவடிக்கைகள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போடும்படி அமைக்கிறது. புஷ்பாவும் லக்ஷ்மியும் வாழ்வில் மிக மோசமானதைச் சகித்துக்கொண்டதாக நினைக்கும் போது, அவர்கள் மிகவும் திகைப்பூட்டும் மேலும் ஒரு உண்மையை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கேள்வி கேட்கும்படி அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் பெண்களின் தேர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட உலகில், சமூக விதிமுறைகளை மீறி, தங்கள் சொந்த விதிகளை உருவாக்குவதற்கான வலிமையை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? மேலும் அறிய ‘பஹிஷ்கரணா’வைப் பாருங்கள்!
இயக்குநர் முகேஷ் பிரஜாபதி கூறுகையில்.., “பஹிஷ்கரனா” ஒரு சக்திவாய்ந்த கதை மற்றும் சிக்கலான கதாபாத்திரங்களுடன் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை. கதாநாயகி, புஷ்பா, இழப்பதற்கு ஒன்றும் இல்லாதவர் மற்றும் வாழ்க்கை நியாயமற்றதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டவர், ஆனால் கடல் போல அமைதியாகவும், ஆங்காரமாகவும் முரண்படும்போது புயல் வீசும் என்பது உறுதி! புஷ்பாவிற்கு பல அடுக்குகள் உள்ளன, மேலும் அவரது கதை சவால்களை எதிர்கொண்டாலும் கூட, அதைக்கடந்து வரும் திறன் கொண்டவர். நடிகை அஞ்சலி தன் தனித்துவமான திறமையால் புஷ்பாவை தன் நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார், . ZEE5 மற்றும் Pixel Pictures உடன் இணைந்து இந்த நுணுக்கமான கதைசொல்லலைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த சிக்கலான கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பதில் எங்கள் திறமையான நடிகர்களின் அர்ப்பணிப்புக்காக நான் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். “பஹிஷ்கரனா” இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்.
முன்னணி நடிகையான அஞ்சலி, தனது கதாபாத்திரம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதாவது.., “பஹிஷ்கரனாவில் புஷ்பாவாக நடித்தது எனக்கு மிக நிறைவான அனுபவமாக இருந்தது. ஒரு அப்பாவி வேசியாக இருந்து அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக வலிமையையும் தைரியத்தையும் கொண்டு போராடும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தின் பயணம் சவாலானது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருந்தது. புஷ்பா மர்மம் நிறைந்த ஒரு பெண், மற்றும் அவரது கதை ஒரு தவற்றைச் சரிசெய்ய எடுக்கும் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் ஒரு சான்றாகும். ZEE5 பார்வையாளர்கள் அவளது மாற்றத்தைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவரது கதை என்னைப் போலவே அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”