அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.  BTG Universal நிறுவன தலைவர்  திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று வெகு விமரிசையாக   நடைபெற்றது.

முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாகக் கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். முன்னதாக இந்நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில்,  ஹாரர் திரைப்படமான “டிமாண்டி காலனி 2” படமும், இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில்,  நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும், ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படைப்பினை பிரம்மாண்டமாகத் துவக்கியுள்ளது. தொடர் வெற்றிப்படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், அவரது 36 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை, மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.  இப்படத்தின் நிர்வாகப் பணிகளை டாக்டர் M.மனோஜ் பெனோ செய்கிறார்.

தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.  டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர்.  அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top