சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, அனிமேஷன் அறிமுக வீடியோ வெளியாகவுள்ளது.

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம்,  பார்வையாளர்களை காலத்தின் மீது  ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ‘கல்கி 2898 AD’ உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அறிமுகப்படுத்தும் வகையில், இப்படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ OTT இல் திரையிடப்பட உள்ளது, இந்த வீடியோவிற்கு நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ளார்.Kalki 2898 AD To Be Promoted Internationally | cinejosh.comபொழுதுபோக்கு செய்தி நிறுவனமான பிங்க்வில்லா தளத்தில் கூறியுள்ள தகவலின் படி…, வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 AD.’  படத்தின் சிறப்பு அனிமேஷன் அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் உலகம் குறித்து ஒரு அறிமுகத்தை வழங்கும். இந்த முழு அனிமேஷன் வீடியோவிற்கும் முன்னணி நட்சத்திர நடிகர் பிரபாஸ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுக வீடியோவின் டிஜிட்டல் பிரீமியரில், ‘கல்கி 2898 AD’ படத்தில் நட்சத்திர நடிகர்கள் பங்குபெறும் கதாபாத்திரங்களையும் இந்த வீடியோ அறிமுகப்படுத்தும்.

இந்த அனிமேஷன் அறிமுக வீடியோவின்   உரிமையை கைப்பற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் பெரும்  முதலீட்டைச் செய்துள்ளதாக இந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்னதான உலகளாவிய பிரீமியரைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு பிரபல நட்சத்திர நடிகர் இதுபோன்ற அனிமேஷன் அறிமுக வீடியோவிற்கு, குரல் கொடுப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த அப்டேட் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு அப்டேட்டிலும் வானளாவ உயர்ந்து வருகிறது.

‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு, பெரும் அலைகளை உருவாக்கியதுடன், உலகளாவிய வகையில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழித் திரைப்படமாகும், இது புராணக்கதைகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் நடக்கும்  சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top