கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது…

உலகம் முழுக்க விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பு சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் விமானம், வங்கி என பொதுமக்களின் அடிப்படை சேவைகள் முடங்கியிருக்கின்றன. இது தொழில் நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட இணையவெளி தாக்குதலா என்று வல்லுனர்கள் இந்த சூழலை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற நாவலில் 2032 ஆம் ஆண்டு ஜெல்லி என்ற வைரஸ் ஊடுருவி பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படுவது போல எழுதப்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் அபோகலிப்ஸ் எனும் மெய்நிகர் காவுகோள் குறித்து கபிலன் எழுதியிருக்கிறார். தற்போது அதே போன்ற சூழல் உருவாகியிருப்பதால் கபிலன் வைரமுத்துவின் நாவலை வாசகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் ட்விட்டரில் கேட்ட கேள்விக்கு கபிலன் வைரமுத்துவின் ஆகோள் நடக்கிறது என்று ஒரு தமிழ் வாசகர் கமெண்ட் செய்திருக்கிறார். ஆகோள் நாவல் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top