பட்ஜெட் பத்மநாபனாக வாழ்கிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. எந்த அளவுக்கு என்றால் வண்டியின் பெட்ரோலை சேமிப்பதற்காக மற்ற வண்டியை பிடித்துக் கொண்டு டோ செய்தபடி செல்கிறார்.ஒரு பெரிய கூட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வீட்டின் சுமைகளையும், பணத்தேவைகளையும் இவர் ஒரே ஆளாக சமாளிக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் வீட்டு மாடிக்கு குடி வருகிறார் மிருணாள் தாகூர். இவர் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் ஒருவராக பழகுகிறார். மிகவும் அன்பாவும் நடந்துக் கொள்கிறார். பின் மிருணாள் தாகூர் உடன் காதல் வயப்படுகிறார் விஜய் தேவரகொண்டா.காதல் மலரும் தருணத்தில் மிருணாள் தாகூரை பற்றிய ஒரு உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அதனால் இவர்கள் இருவருக்கும் நடுவில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தில் சில மாற்றங்கள் வருகிறது.இறுதியில் மிருணாள் பற்றி விஜய் தேவரகொண்டாவுக்கு தெரிந்த உண்மை என்ன? இவர்கள் இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.பரசுராம் கூட்டணியில் மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. பரசுராமின் சென்ற படத்தைப் போல் இப்படமும் பெருசாக கைகொடுக்கவில்லை. கதை ஒரு பழைய கதை என்றாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.விஜய் தேவரகொண்டா படத்தில் அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மிருணாள் தாக்கூர் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார்.கோபி சுந்தரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை சுமார்.கே.யு.மோகனனின் கேமராவில் ஒவ்வொரு காட்சியும் பளிச்சென்று இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா தொடர்பான காட்சிகள் ப்ரெஷ்சாக இருக்கிறது.ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தை ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.