தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும் #DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பிரமாண்ட பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது.

மாபெரும் திறமைகள் ஒரு சேர அமையப்பெற்ற – தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான, பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பான #DNS தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது. மேலும் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.

#DNS (தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா என்பதன் சுருக்கம்) திரைப்படத்தின் பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொள்ள பிரமாண்டமாக இன்று தொடங்கப்பட்டது. படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் வசனங்கள் நிறைந்த பகுதியின்  படப்பிடிப்புடன் தொடங்கியது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
Imageதனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முறையே அவர்களின் சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா(தெலுங்கு) மூலம் பிரமாண்ட வெற்றியை வழங்கியதால், இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் அவர்கள் திரையை ஒருசேர பகிர்ந்து கொள்வதை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்.

ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருகிறார். தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் உறுதியுடன் சிறந்து விளங்கும்.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள்.

நடிகர்கள்: தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: சேகர் கம்முலா
படத்தை வழங்குபவர்: சோனாலி நரங்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ்
ஒளிப்பதிவு இயக்குனர்: நிகேத் பொம்மி
தயாரிப்பு வடிவமைப்பு: ராமகிருஷ்ணா சபானி, மோனிகா நிகோத்ரே

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத்
விளம்பரங்கள்: வால்ஸ் மற்றும் டிரென்ட்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top