BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா,வில் அம்பு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார்.
கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.
ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையை முன்னாள் அமைச்சர் SP வேலுமணி கலந்துகொண்டு துவக்கிவைத்தார். மற்றும் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தாய் சரவணன், தயாரிப்பாளர் நந்தகுமார் போன்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
ஏ.வி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சிறந்த படைப்புகளைத் தந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்,இந்த படத்தையும் புதுமையான களத்தில் பரபரப்பான, சைக்கலாஜிகல் திரில்லராக உருவாக்கி வருகிறார்.