யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யிலிருந்து ‘லேகே பிரபு கா நாம்’ என்கிற சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடனமாடியுள்ள முதல் பாடலின் அதிர்வை ஏற்படுத்துக்கூடிய டீசரை வெளியிட்டுள்ளது

சல்மான் கான் & கத்ரீனா கைப் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய பாடல்களையும் வழங்கியுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட்  கதாபாத்திரங்களுக்கு மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளதுடன் இணையத்தையும் அதிரவைத்துள்ளனர்.

‘டைகர் 3’ படத்தின் முதல் பாடலான ‘லேகே பிரபு கா நாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இணையத்தை அடித்து நொறுக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் சல்மான் & கத்ரீனா இருவரும் துருக்கியின் கப்படோசியாவில் உள்ள ஒரு அற்புதமான இடத்தில் ஆடிப்படுவதுபோல் இடம்பெற்றுள்ளது. ‘லேகே பிரபு கா நாம்’ பாடல் வரும் திங்கள் கிழமை (அக்-23) வெளியாகும் என்கிற அறிவிப்புடன் இன்று ஒரு டீசரை வெளியிட்டு யஷ்ராஜ் பிலிம்ஸ் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

டீசரை காண இங்கே கிளிக் செய்யுங்கள்;  https://youtu.be/aDBzdcJvqTs

பிரீதம் இசையமைத்து பென்னி தயாள், அனுஷா மணி இருவரும்  பாடியுள்ள இந்த அதிர்வேற்றக்கூடிய நடனத்தில் சல்மான் கானும் கத்ரீனாவும் அற்புதமான கெமிஸ்ட்ரியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த பாடலில் இவர்கள் இருவருக்குமான அழகிய தோற்றத்தை பார்க்கும்போது இது இந்த திருவிழா சீசனில் ஒரு பார்ட்டி ஆந்ததமாக நிச்சயமாக மாறும்.

மனீஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top