Author: tamilcinewoods

சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின்  131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.சிவண்ணாவின்  131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் […]

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து […]

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட ‘இஷ்க்’ மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் […]

‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு

சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ – BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன […]

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக […]

தனது பிறந்தநாளை முதியோர் இல்ல உறுப்பினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் சாக்ஷி அகர்வால்!

காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா மற்றும் பல வெற்றிகரமான படங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை சாக்ஷி அகர்வால் சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு தனிமை விரும்பியாக அறியப்பட்ட அவர், தனக்கான சிறப்பான நாளை ஓர் முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் மிகவும் அர்த்தமுள்ள முறையில் செலவிட்டார். அவர் சில சுவையான உணவுகளை தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். பின்னர், அவர் வயதானவர்களுடன் சில விளையாட்டுகளை விளையாடி,  ஆடிப்பாடி […]

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன்  என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் […]

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை  கொண்டாடும் விதமாக, ஒரு […]

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘மக்காமிஷி’ என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம் வரும் என தெரிவித்து ஹாரிஸ் ஜெயராஜ், பால் டப்பா மற்றும் […]

லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் ஃபர்ஸ்ட் லுக் !!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. OVO Arena Wembley இல், ஒரு தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வெளியாவது இதுவே […]

Back To Top