ரொமான்ஸில் கலக்கும் கிங்கான் !, கொண்டாடும் நெட்டிசன்கள்!, டங்கி டிராப் 5 ஓ மஹி இந்த ஆண்டின் சிறந்த பாடல் !!

டங்கி படைப்பாளிகள் “டங்கி டிராப் 5 ஓ மஹி” பாடல் மூலம்  நிபந்தனையற்ற அன்பின் சிம்பொனியை பார்வையாளர்களுக்கு தந்துள்ளனர்.  ஹார்டி மற்றும் மனு கதாபாத்திரங்களுக்கு இடையேயான தன்னலமற்ற அன்பின் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் இந்தப் பாடல், அவர்களின் காதல் கதையின் அழகைப் படம்பிடித்து காட்டுவதுடன், கேட்போரின் மனதில் ஆழமான அன்பை விதைக்கிறது. அழகான பாலைவனப் பகுதிகளின் பின்னணியில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது, ஹார்டிக்கும் மனுவுக்கும் இடையேயான காதலைக் கொண்டாடும் அதே வேளையில், அவர்களின் பயணத்தின் உள்ளார்ந்த போராட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாடல் வெளியானதிலிருந்து,  இணையம் முழுக்க ஒரே பேசுபொருளாக மாறியுள்ளது.
Dunki Drop 5: Shah Rukh Khan dedicates O Maahi song to lovers; proposes to Taapsee Pannu in desert | PINKVILLAஇந்த ஆண்டின் மிகச்சிறந்த பாடல் என்று நெட்டிசன்கள் இப்பாடலைப் பாராட்டி வருகின்றனர். SRK, அரிஜித் சிங் மற்றும் ப்ரீதம் ஆகியோரின் கூட்டணியில்,   இந்த பாடல் மனம் மயக்கும் மாயாஜால அனுபவத்தை தருகிறது. இணையம் முழுக்க ரசிகர்கள் பாடல் குறித்துப் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றிலிருந்து சில உங்களுக்காக..

https://x.com/yagaa__/status/1734181294303822241?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/filmyyash/status/1734200603486658789?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/amitrahangdale4/status/1734200496830001555?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/mizsayani/status/1734180836713640246?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

https://x.com/alammiroj/status/1734201216048287882?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top