ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷாருக் கானின் நடிப்பில் உருவான ‘ஜவான்’ உலகளவில் வெளியானது. இந்த திரைப்படம் – நடிகருக்கு சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஷாருக்கான் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
ஷாருக்கானின் மீர் அறக்கட்டளையில் அமில வீச்சில் உயிர் பிழைத்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், வீதியோர குழந்தைகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடியின குழந்தைகள், மாற்று திறனாளிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
பல நபர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்களுக்கு இது அவர்களின் முதல் திரையரங்க வருகையாகவும் இருந்தது. இதன் விளைவாக அவர்களிடத்தில் மகிழ்ச்சியான புன்னகையும் பூத்தது.