இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மற்றும் விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் நடித்த ‘புலி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’; விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் நடித்த ‘புலி’;
பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு முதன்மை வேடங்களில் நடித்த ‘அறை எண் 305-ல் கடவுள்’; ராகவா லாரன்ஸை மற்றொரு பரிமாணத்தில் வெளிப்படுத்திய ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஆகிய படைப்புகளை தொடர்ந்து சென்ற வருடம் இவரது படமான ‘கசடதபற’ சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது.

சரித்திரம், ஃபேண்டஸி என வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி பெற்ற சிம்பு தேவன், பான்-இந்தியா படம் ஒன்றை தற்போது இயக்குகிறார்.

மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் முழுக்க முழுக்க கடலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு ‘போட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. யோகி பாபு, கௌரி ஜி கிஷன் மற்றும் பிரபல நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
Imageமுற்றிலும் வித்தியாசமான ‘போட்’ திரைப்படத்தின் கதை 1940-ம் ஆண்டின் பின்னணியில்  நடைபெறுகிறது. சென்னை மீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்கு பயந்து 10 பேர் ஒரு சின்ன படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக நடுக்கடலில் அந்த படகு நகர முடியாமல் நின்று விடுகிறது.

அந்த பரபரப்பான சமயத்தில் படகு ஓட்டையாகி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க, ஒரு பெரிய சுறாவும் படகை சுற்றிவர, படகில் உள்ளவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை. முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக இருக்கும்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள ‘போட்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கையாண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தினேஷும் தயாரிப்பு வடிவமைப்புக்கு டி சந்தானமும் பொறுப்பேற்றுள்ளனர். ‘போட்’ திரைப்படம் வரும் பிப்ரவரியில் ஐந்து மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top