ஹாட் ஸ்பாட் – விமர்சனம்

எதிர்பாராத 4 வெவ்வேறு கதை களம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஹாட் ஸ்பாட்’. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஹாட் ஸ்பாட்
ஆதித்யா பாஸ்கரும், கவுரி கிஷனும் காதலித்து வருகின்றனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கின்றனர். ஆனால் பெண்கள் வேலைகளை ஆண்கள் செய்கிறார்கள். அதாவது மணமகன் ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் மணமகள் கவுரி கிஷன் தாலி கட்டுகிறார். இதுமட்டுமின்றி திருமணமாகி மணமகள் கவுரி கிஷன் வீட்டிற்கு மணமகன் ஆதித்யா பாஸ்கர் செல்கிறார். அங்கு வழக்கமான மாமியார் கொடுமைக்கு பதில் மாமனார் கொடுமை நடக்கிறது. அங்கு சமையல் செய்வதில் இருந்து அனைத்து வீட்டு வேலைகளையும் ஆதித்யா பாஸ்கர் செய்கிறார்.

அடுத்ததாக சாண்டியும், அம்மு அபிராமியும் காதலித்து வருகிறார்கள். பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடைபெறும் போது சாண்டியும், அம்மு அபிராமிக்கும் மிகப் பெரிய உண்மை தெரிய வருகிறது. அதற்கடுத்து அவர்கள் திருமணம் செய்தார்களா?. அவர்கள் வீட்டில் அவர்களை சம்மத்திதார்களா? என்பதை மிகவும் சுவாரசியமாகவும் கலகலப்பாகவும் எடுத்து இருக்கிறார்.

ஹாட் ஸ்பாட்அடுத்த கதையில் சுபாஷ் சாப்ட்வேர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். திடீரென பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதைத்தொடர்ந்து ஆண் பாலியல் தொழிலாளியாகிறார். இதை அவர் காதலியான ஜனனி ஐயர் அறிந்து எப்படி ரியாக்ட் செய்கிறார் அவர்களிடையே உள்ள பிரச்சனையை பற்றி பேசும் கதை.நான்காவதாக கலையரசன் மனைவி சோபியா குழந்தையை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க வைக்கிறார். நிகழ்ச்சியின் போது 15 வயது சிறுவனால் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார். அதற்கடுத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி பேசும் கதை.இவ்வாறு 4 கதைகளுக்கான தீர்வை அவரது பாணியில் வித்தியாசமாக சொல்லி உள்ளார் விக்னேஷ் கார்த்திக்.

ஆதித்யா பாஸ்கர்-கவுரி கிஷன் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்க வைப்பதோடு மாமனார் கொடுமைக்கு ஆளாகி சொந்த வீட்டுக்கு செல்ல மாமனாரிடம் கெஞ்சுவதும் என அவரது யதார்த்த நடிப்பு கை தட்டல். காதலர்களான அம்மு அபிராமி, சாண்டி கலகலப்பாக நடித்துள்ளனர். ஜனனி ஐயர் ஒரு மாடர்ன் பெண்ணாக ரசிக்கும்படி நடித்து இருக்கிறார். கலையரசன் அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை அவரது பாணியில் எதார்த்ததோடு நடிப்பால் பார்வையாளர்களை கலங்க வைத்துள்ளார்.

ஹாட் ஸ்பாட்ஒரு கதையை ஒரு படத்தில் சொல்வதே கடினம். ஆனால் விக்னேஷ் கார்த்திக் 4 கதைகளி ஒரே படத்தில் சொல்லி இருக்கிறார். 4 கதைகளும் ஒரு ஒரு மாடர்ன் பிரச்சனைகளுடன் இருக்கிறது. விக்னேஷ் கார்த்திக் இக்கால சமூக பிரச்சனையை கயில் எடுத்து அவர் பானியில் வித்தியாசமாக தீர்வு கொடுத்து இருக்கிறார். முதல் மூன்று கதைகளி மிகவும் கலகலப்பாகவும் மிக சுவாரசியமாகவும் எடுத்து சென்றுள்ளார்.

இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசை கூடுதல் பலம். படத்தின் நகைச்சுவை காட்சிகளை இவர் இசையின் மூலம் இன்னும் கூடுதலாக ரசிக்க முடிகிறது.கோகுல் பினாய் ஒளிப்பதிவை படத்திற்கு சிறப்பாக செய்துள்ளார். 4 கதைகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பாலமணிமர்பன்,சுரேஷ் குமார் மற்றும் கோகுல் இணைந்து ஹாட் ஸ்பாட் படத்தை தயாரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top