மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருட பகை இருந்து வருகிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ் நம்பீராஜன் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். இதனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் நம்பீராஜனை பழிவாங்க முயற்சிக்கிறார்கள்.
இறுதியில் சந்தோஷ் நம்பீராஜனை மற்றொரு குடும்பம் பழிவாங்கியதா? சந்தோஷ் நம்பீராஜன் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா? இரு குடும்பங்களுக்கு இடையே பகை ஏற்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பீராஜன், மிக இயல்பாக நடித்து இருக்கிறார். அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவி, கிராமத்து பெண்ணாக வாழ்ந்து இருக்கிறார். அதிகம் பேசாமலே முகபாவனைகள் மூலம் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளில் இருவரும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் நடிப்பு யதார்த்தம்.
பங்காளி சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். முதல்பாதி, கதை எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியவில்லை. இரண்டாம் பாதியிலும் திரைக்கதை தெளிவாக இல்லை. காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை பயணித்து இருப்பது பலவீனம். ஊர் மக்களை இயற்கையாக நடிக்க வைத்திருப்பது சிறப்பு.
இளையராஜாவின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை பலமாக அமைந்து இருக்கிறது. அவர் இசையமைத்த பாடல்களே பின்னணியில் ஒலிப்பது
யைப் பற்றி சொல்லவா வேண்டும்!, படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது. அதிலும், 1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளை ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் ஆகியோர் மண்மனம் மாறாமல் படமாக்கி இருக்கிறார்கள்.